சாய்ராம்
தன்னிகரற்ற தன்னலமற்ற தன்னார்வ தொண்டனே, தேவதூதனே
அடியேன், என்னதவம் செய்தேனோ உன்புகழை இங்கு நான்பாட, பக்தேனே மகாபக்தேனே போற்றி போற்றி ...
சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ....பா ...கம பா ...
பல்லாயிரம் பக்தர்கள்காண உருவாக்கினாய் இத்திருக்கோயிலையல்லவா...
கோயிலின் நிர்வாகமே, உன் தியாகமே...
பாலில் கரைந்த சக்கரைபோலே மறைந்துநிற்கிறது உன்பக்தியே, இது தெய்வ சக்தியே...
சுடர் சூரியனை உருக்கி பொற்பல்லக்கு செய்து
அதில்உம்மை ஊர்வலமாய் சுமந்து சென்றாலும் ஈடுஇணையாகதல்லவா, நீர்செய்த இத்திருகோடைக்கு...
கதிரவனே கண்விழிக்கும்முன்னே, எம்மகவானுக்கு பட்டாடையுடுத்தி, படையலிட்டு...
அதிகாலை ஆரத்தியால் ஆராதனை செய்தாயல்லவா, தேவகுருமார்களே, என்தெய்வத்தாயின் திருமகேளே...
சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...
வியாழன்தோறும், ஊர்வலமாய் ஊர்ந்துவரும் ஊர்திகளை, பக்குவமாய் அடுக்கினாய் புத்தகம்போலே அல்லவா, பக்தேனே மகாபக்தேனே...
குளிரிலும், பனியிலும், வெயிலிலும், மழையிலும் நனைந்தாய் அல்லவா...என்நேசனே...
உலகில்உள்ள அனைத்து மலர்களையும் உன்பாதத்தில் சமர்பித்தாலும் உன்சேவைக்கு ஈடுஇணையாகதல்லவா, என்நண்பனே...
சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...
பசியாரவரும் பக்தர்களுக்கு பாசமாய் பரிமாறினாய், பிரசாதத்தை மகாபிரசாதத்தை அல்லவா...
காற்கடுக்க பலமணிநேரம் நின்றுகொண்டு சமையல் செய்தாய் அல்லவா, தேவ தேவதைகளே...
இந்த அன்னபூர்ண தெய்வசெயலுக்கு,
வானவில்லை வளைத்து தொட்டிலாக்கி அதில்உம்மை தாலாட்டினாலும், அது போறாதல்லவா...என் சகோதர சகோதிரிகளே...
செய்யும் செயலில் மேன்மையான செயல், தூய்மைசெய்யும் தொழில்என்பேன்...
உங்களின் இத்திருப்பணிக்கு, வானில்உள்ள வின்மீன்களை மலர்மாலையாய் உம்திருக்கழுத்திலிட்டாலும்,
உம்திரசேவைக்கு அது ஈடுஇணையாகதல்லவா...நேசனே, மகானேசனே...
ஆரத்திபமேற்றி எம்ஆதவனை ஆராதனை செய்ய உதவும்
உம்திருசேவைக்கு தேவாமிர்தத்தால் அர்ச்சனை செய்தலும்...ஈடுஇணையாகதல்லவா...
சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...
கோயிலின் நிர்வாகமே, உன் தியாகமே...
பாலில் கரைந்த சக்கரைபோலே மறைந்துநிற்கிறது உன்பக்தியே, இது தெய்வ சக்தியே...
எம்மகவானுக்கு பட்டாடையுடுத்தி, படையலிட்டு...
அதிகாலை ஆரத்தியால் ஆராதனை செய்யும், தேவகுருமார்களே, என்தெய்வத்தாயின் திருமகேளே...
குளிரிலும், பனியிலும், வெயிலிலும், மழையிலும் சேவை செய்யும், சீடனே, தெய்வசீடனே...
காற்கடுக்க பலமணிநேரம் நின்றுகொண்டு சமைத்து பரிமாறும், தேவ தேவதைகளே, நீர் தேவலோகோ தேவ தேவதைகளே...
மேன்மையான தூய்மை எனும் திருசேவை செய்யும், என்நேசனே, மகாநேசனே...
ஆரத்திபமேற்றி எம்ஆதவனை ஆராதனை செய்ய உதவும்...சேவகனே, மகாசேவகனே...
தன்னலமற்ற அனைத்து தன்னார்வ தொண்டர்களின் இத்தெய்வத்திருப்பணிக்கு
பிரியம்மா வீற்றியிருக்கும் தாமரையினால் அர்ச்சனை செய்தாலும், ஈடுஇணையாகதல்லவா...
சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...
- சாய்ராம்
No comments:
Post a Comment