ஓம் நமச்சிவாய, இறைவன் சிவன் அபிஷேகம்.
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
இளகிய மனம் கொண்ட என் ஈசனுக்கு இளநீர் அபிஷேகம்...இளநீர் அபிஷேகம்...
பறந்த மனம் கொண்ட என் பரமேஸ்வரனுக்கு பன்னீர் அபிஷேகம்...பன்னீர் அபிஷேகம்...
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
அகிலத்தை ஆட்சி செய்யும் என் ஆண்டவனுக்கு அமிர்தத்தால் அபிஷேகம்...அமிர்தத்தால் அபிஷேகம்...
தியானத்தின் அதிபதியான என் தில்லைநாதனுக்கு தேனால் அபிஷேகம்...தேனால் அபிஷேகம்...
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
பஞ்சபூதங்களையும் தன்கட்டுக்குள் வைத்திருக்கும் என் பஞ்ச அருணாசலேஸ்வரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்...பஞ்சாமிர்த அபிஷேகம்
சங்கடங்களை தீர்க்கும் என் சதாசிவனுக்கு சந்தனத்தால் அபிஷேகம்...சந்தனத்தால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
திருவிளையாடல் புரியும் என் திருச்சிற்றம்பலத்தானுக்கு திருநீறு அபிஷேகம்...திருநீறு அபிஷேகம்
நெற்றிக்கண் கொண்ட என் நீலகண்டனுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்...நெல்லிப்பொடி அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
அன்பே உருவான என் அருணாச்சலேஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம்...அன்னத்தால் அபிஷேகம்
மங்களம் உண்டாக்கும் என் மஹேஸ்வரனுக்கு மஞ்சளால் அபிஷேகம்...மஞ்சளால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என் அண்ணாமலையனுக்கு அரிசிமாவால் அபிஷேகம்...அரிசிமாவால் அபிஷேகம்
தர்ம தலைவன் என் தட்சிணாமூர்த்திக்கு தயிரால் அபிஷேகம்...தயிரால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
அறநெறியான வாழ்வை கற்று தந்த என் நடராஜனுக்கு நெய்யால் அபிஷேகம்...நெய்யால் அபிஷேகம்
பக்தி தாகம் தீர்க்கும் என் திகம்பரனுக்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்...கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
நல்ல எண்ணம் தரும் என் நாகநாதனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம்...நல்லெண்ணெய் அபிஷேகம்
எளியவருக்கும் அடைக்கலம் தரும் என் லிங்கேஸ்வரனுக்கு எலுமிச்சை அபிஷேகம்...எலுமிச்சை சாரால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
காக்கும் கரம் கொண்ட என் கபாலீஸ்வரருக்கு கரும்பு சாரால் அபிஷேகம்
பக்தனின் பாவங்களை போக்கும் என் பரமேஸ்வரனுக்கு பாலால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
பிறவி பயனை அள்ளித்தரும் என் பஞ்ச நாதனுக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம்
சக்தியை கொடுத்திடும் என் பரசிவனுக்கு சர்க்கரையால் அபிஷேகம்
ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...
No comments:
Post a Comment