Tuesday, April 29, 2025

எங்கு இருக்கிறாய் பாபா... என்று வருவாயோ பாபா...

 ம்ம் ம்ம் ம்ம் ....


எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

குளிர் மேகமாய் வருவாயோ பாபா...இல்லை
சுடர் சூரியன்போல் காட்சி தருவாயோ பாபா...இல்லை

பனியில் நனைந்த மலர்கள் போல் மலர்வாயோ பாபா...இல்லை
வானில் வானவில்போல் காட்சி தருவாயோ பாபா...இல்லை

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

அம்மாவின் கற்பூர பிரசாதம்போல் வருவாயோ பாபா...இல்லை
காக்கடா ஆராத்தியின் தீபத்தில் தெரிவாயோ பாபா...இல்லை

கோயிலில் மணிஓசையாய் ஒலிப்பாயோ பாபா...இல்லை
உன் திருஉருவ சிலையில் இருந்து காட்சி தருவாயோ பாபா...இல்லை

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

துள்ளிக்குதித்து ஓடும் புள்ளிமான் போல் பாசமாய் பக்கத்தில் வருவாயோ பாபா ...இல்லை
குறும்புதனம் செய்யும் குட்டி குழந்தைபோல் என்னை அரவணைப்பாயோ பாபா ...இல்லை

இல்லை வானில் உயர பறக்கும் பருந்துபோல் பறந்து வருவாயோ பாபா ...இல்லை
வளைந்து நெளிந்து செல்லும் சர்ப்பம் போல் கண்முன்னே வந்து மறைவாயோ பாபா ...இல்லை

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

No comments:

Post a Comment