மனிதா நன்றாக யோசி, நாம் மறைந்த பின் மண்ணிடம் மண்ணாக விட்டுச்செல்லும் நம் கண்ணை,
கண்ணில்லா நம் சகோதர,சகோதரிகளிடம் தானமாக கொடுத்து, நம் கண்ணெயும்
வாழவைக்கலாமே!
மனிதா நன்றாக யோசி, நாம் பார்த்த இவ்வுலகை, இதுவரை தன் முகத்தைகூட பார்க்கமுடியாத மற்றும்
அகக்கண்ணால் இவ்வுலகை காணும் நம் உடன்பிறவா கண்ணில்லா
சொந்தங்களுக்கு புறக்கண்ணை கொடுத்து புதிய உலகை காட்டி செல்லலாமே!
மனிதா, வாழும்போது செய்யும் தானத்தை விட, வாழ்ந்த பின் செய்யும் தானமே சிறந்தது அதிலும் கண் தானம்
தலை சிறந்தது என்பேன்!
கண்ணை தானமாக கொடு, நம் கண்ணாவது இன்னும் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு செல்லட்டும் !
No comments:
Post a Comment