Sunday, December 27, 2015

அன்புள்ள மகனுக்கு,

அழகாய் ஒர்  வீடு அமைத்தாய்
அதிலோ நீந்தி விளையாட நீச்சல் குளம் உண்டு
ஓடி  விளையாட பூங்கா போன்ற தோட்டம் உண்டு
படுத்து உறங்க இரண்டு மூன்று அறைகள் உண்டு
உன் செல்ல நாய் உறங்க  பஞ்சு மெத்தை உண்டு
காற்றாட பால்கனி உண்டு
 ஆனால் ஏனோ எனக்கோர் இடம் இல்லை

இந்த முதியோர் இல்லத்தில் அன்போடு அரவணைக்க  பல பேர் இருக்க
ஏதோ இந்த பெத்த மனம் உன் முகத்தை தேடுதடா,
பேரனின் மழலை பேச்சை கேட்க என் காது ஏங்குதடா,
ஒரு நிமிடம், கை பிடித்து உன் மடியில் தலை சாய்க்க நாடி துடிக்குதடா
சில சமயம் நா ஒரு அனாதை போன்ற எண்ணம் தொன்றுதடா

உறுக்கதுடுன் கேட்கிறேன், ஒரு நாள் உன் வீட்டில் நான் தங்க வாடகை என்ன தரவேண்டும்,
அதன் விலை என் உயிர் என்றாலும் தருவேன்,

என்னிடம் உள்ள எல்லாவற்றையும் உனக்காக கொடுத்த எனக்கு  ,
எனக்காக மூன்று வரம் தருவாயோ,

முதல் வரமாய்,

இது வரை உன் வீட்டு வெந்த அரிசியை நான் ருசித்ததில்லை,
எனக்கான வாக்கரிசியை உன் வீட்டினிலிருந்து எடுத்தருள்வாயோ.

அடுத்த வரமாய்,

அடுத்த ஜென்மத்தில் உன் மகனாக பிறக்க வேண்டும்,
நீ தள்ளாடும் வயதில், உன்னை என் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்,
என் உயிரே போனாலும், உன்னை முதியோர் இல்லம் அனுப்பேன்
ஏனெனில், உன் அன்பில்லாமல் அனுபவித்த எனக்குதான் தெரியும்
பூமியின் நரகம் முதியோர் இல்லம் என்று.

கடைசி வரமாய்,

உன்னை கைபேசியில் அழைத்த போதெல்லம்,வேலையாக இருக்கிறேன்
என்று இரண்டு வார்த்தையில் விடை அளிப்பாய்,

நான் வசிக்கும் முதியோர் இல்லத்திலிருந்து எனக்காக உன்னை அழைத்தால் எடுக்காமல் இருக்காதே
எனக்கு கொள்ளி வைக்க மறக்காதே

என்றும் உன் அன்புக்காக எங்கும் உன் அப்பா.....

-கார்த்திகேயன் பிச்சை

*****************நண்பன் ********************
தாய் உயிர் கொடுத்தாள்
தந்தை அறிவைக் கொடுத்தார் ....

நண்பா நீ மட்டும் தான்
இவ்வுலகில் எனக்கு முகவரி கொடுத்தாய் ....

ஆம் இந்த வேலையில்லா  பட்டதாரியை
வேலையுள்ள  பட்டதாரி ஆக்கினாய் ....

தாயிடமும் நண்பனிடமும் மட்டுமே
பகிர்ந்துக் கொண்ட வார்த்தை
பசிக்குது என்று ....

வேரில்லா மரங்கள் இல்லை
நல்ல நண்பனில்லா மனிதனில்லை ....

தாயில்லாமல் குழந்தை பிறப்பது இல்லை
அது நட்பை சுவாசிக்காமல் இறப்பது இல்லை ....

வரவு செலவு இல்லா வாழ்க்கை இல்லை
நம் நட்பில் வரவு மட்டுமே,  செலவேயில்லை .....

துன்பம் என்றால் நாம் முதலில் அழைப்பது
கடவுளை அல்ல நம் நண்பனைத்தான் ....

இவ்வுலகில் காசில்லாமல் எதுவும் கிடைப்பதில்லை
நல்ல நட்பை தவிர ....

என் மீது எனக்கே நம்பிக்கையில்லாத போதும்
என் மீது நம்பிக்கை வைத்தவன் நீ ....

மாற்றம் மட்டுமே மாறாதது என்பார்கள்
அது தவறு என்று உன் நட்பை சுவாசித்ததும்
உணர்ந்து கொண்டேன், ஆம் உன் நட்பும் மாறாதது என்று.....

நண்பா இறைவனுக்கும் ஒருப்படி மேல் நீ ,
ஆம் தவறு செய்தால் கடவுள் கூட  தண்டிப்பார்,
ஆனால் நீ மட்டுமே  மறுமுறை தவறு செய்ய விடாமல் தடுப்பாய் .....

நட்பு என்பது வேறொன்றுமில்லை
பல தாய் வயிற்றில் பிறந்த ஒர்  குழந்தை .....

- கார்த்திகேயன் பிச்சை

பயந்து பயந்து ,தாழ்ந்து தாழ்ந்து ,
அடுத்தவரை பார்த்து, வியந்து வியந்து வாழ்ந்த வாழ்க்கைபோதுண்டா நண்பா ,

விழித்திடு  , எழுந்திடு , நெஞ்சை உயர்த்திடு
உன்னை கை கொட்டி சிரித்தவர்களை எல்லாம்
உன்னை கை தட்டி வரவேற்க செய் ,

உன்னை உதவாக்கரை என்றவர்களை எல்லாம்
உன்னிடம் உதவிக்கரம் நீட்டச் செய் ,

பட்ட அவமானங்கள் போதுண்டா நண்பா
நம்மை அவமானப்படுத்த எவனுக்கும் உரிமை இல்லை,ஏன்
அந்த கடவுளுக்கும் கூடத்தான்,

நாம் ஒன்றும் சூரியனல்ல விடியலுக்காக காத்திருக்க
சுழன்று கொண்டே இருக்கும் பூமி ,

ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்
வாய்ப்பு கிடைக்கா விட்டால் உண்டாக்கு வாய்ப்பை,

உலகிற்கு நீ யார் என்று காட்டிடு
உலகம் உன்னால் பெருமை படட்டும் .

- கார்த்திகேயன் பிச்சை