வீர விளையாட்டு
================
================
கண்ணுக்குட்டிய அடக்கும் கத்துக்குட்டி விளையாட்டு என ஏளனமாய் நினைத்தாயோ,
சீறிவரும் காளைகளை பாய்ந்தடக்கும் வீரமுள்ள தமிழ் சிங்கமுடா,
சீறிவரும் காளைகளை பாய்ந்தடக்கும் வீரமுள்ள தமிழ் சிங்கமுடா,
வீரமுள்ள தமிழினத்தின் அடையாளம் எங்கள் ஜல்லிகட்டுடா,
அதை தடுத்து பார்க்கும் உனக்கு திராணி இருந்தால் அலங்காநல்லூர் களத்தில் வந்து நில்லுடா,
அதை தடுத்து பார்க்கும் உனக்கு திராணி இருந்தால் அலங்காநல்லூர் களத்தில் வந்து நில்லுடா,
எம் மன்னர்களும்,முன்னோர்களும் யானைகளையும், குதிரைகளையும் அடக்கி தம் படை சேர்த்து போர் புரிந்த வீரகுலமடா எங்கள் தமிழ் குலம்,
விளையாட்டுக்களத்திலோ பாதுகாப்பு கவசம் இல்லை,
ஆனாலும் இதுவரைக்கும் தமிழன் புறமுதுகை காட்டியதில்லை,
ஆனாலும் இதுவரைக்கும் தமிழன் புறமுதுகை காட்டியதில்லை,
தமிழனை புரிந்துகொள்ள அறிவு கொஞ்சம் வேணுமடா,
தமிழனாய் பிறக்க பல பிறவி தவம் செய்ய வேணுமடா ,
தமிழனாய் பிறக்க பல பிறவி தவம் செய்ய வேணுமடா ,
முட்டா மூடர் கூட்டங்களே ஜல்லிக்கட்டை மிருக வதை என வாய்க்கூசாமல் சொன்னியேடா,
தமிழின காளை பற்றி தெரியுமாடா உனக்கு,
அப்படி சொன்னாதான் புரியுமாடா உனக்கு,
அப்படி சொன்னாதான் புரியுமாடா உனக்கு,
பார்த்தாலே படை நடுங்கும் எங்கள் இன காளையடா,
கொம்பு ரெண்டும் செதுக்கி வைச்ச திருநெல்வேலி அருவாடா,
கொம்பு ரெண்டும் செதுக்கி வைச்ச திருநெல்வேலி அருவாடா,
உலகிலேயே திமிலு உள்ள காளை எங்க காளையடா,
தமிழனோடு துள்ளி விளையாடும் எங்கள் செல்லப்பிள்ளையடா,
தமிழனோடு துள்ளி விளையாடும் எங்கள் செல்லப்பிள்ளையடா,
உன் வணிகம் பெறுக தமிழின உணர்வோடு விளையாட துணிந்தியேடா,
இனி செல்லாது உன்னோட குள்ளநரி சதி எங்களிடம்,
இனி செல்லாது உன்னோட குள்ளநரி சதி எங்களிடம்,
தமிழனோடு சுனாமியும் வர்தாவும் போர்த்தொடுத்து தோற்றோடியநிலையில்,
இயற்கைக்கே இந்தக்கதி என்றால், நீ என்ன எங்களுக்கோ வெறும் தூசு,
இயற்கைக்கே இந்தக்கதி என்றால், நீ என்ன எங்களுக்கோ வெறும் தூசு,
கடைசியாக வாய்ப்பு தருகிறோம் ஓடி விடு எம் நாட்டை விட்டு,
இல்லையேல் நீயே போடப்போற உன் தொழிற்சாலைக்கு பெரிய பூட்டு.
இல்லையேல் நீயே போடப்போற உன் தொழிற்சாலைக்கு பெரிய பூட்டு.
- தமிழன் கார்த்திகேயன் பிச்சை