Tamil Poems
Friday, October 24, 2025
Lord Saibaba Song
நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....
இந்த அறியாத மனம் இங்கே கேட்குது.....
நீ ஹரியா, இல்லை சிவனா, இல்லை ஹரி ஹர சுதனா...என்று...
உன்னை உணர நித்தம் நித்தம் மனம் இங்கே துடித்தது...
நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....
புறக்கண்ணால் காணும்பொது பூக்களின் மனமும், நிறமும் இங்கே வேறுதான் அல்லவா...
எல்லா மனிதனின் முகமும், குணமும் இங்கே வேறுதான் அல்லவா...
நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....
உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்...
எல்லா பொருளின் நிழலின் நிறமும் இங்கே ஒன்றுதான் அல்லவா...
இரு கண்கள் இருந்தாலும் பார்வை இங்கே ஒன்றுதான் அல்லவா...
மனிதன் மொழியாலும் இனத்தாலும் பிரிந்தாலும் பக்தி இங்கே ஒன்றுதான் அல்லவா...
நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....
பொருள் இல்லாத சொல்லும்,
அம்பில்லாத வில்லும் இங்கே வீண் தான் அல்லவா...
பக்தி இல்லாத வாழ்க்கையும்,
உன்னை உணராத மனமும்ம்ம்... இங்கே வீண் தான் அல்லவா...
இந்த அறியாத மனம் இங்கே கேட்குது.....
நீ ஹரியா, இல்லை நீ சிவனா, இல்லை நீ ஹரி ஹர சுதனா...என்று...
a
உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்...
நீயே ஹரி, நீயே சிவன், நீயே ஹரி ஹர சுதன்...என்று...
உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்...
நீயே ஹரி, நீயே சிவன், நீயே ஹரி ஹர சுதன்...என்று...
நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....
Tuesday, June 24, 2025
Lord Muruga Song
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவா...எங்கள் ஆண்டவா...அழகு ஆண்டவா...
ஆறுமுகம் கொண்ட ஷண்முகா...முத்து ஷண்முகா...முருகா ஷண்முகா....
திரு கார்த்திகை பெண்களால் வளர்க்கபெற்ற கார்த்திகேயா ...எங்கள் கார்த்திகேயா...முருகா கார்த்திகேயா...
அமிர்தத்தின் சொந்தகாரன் நீதானே...பஞ்சாமிர்தத்தின் சொந்தகாரன் நீதானே...முருகா நீதானே
திருப்பரங்குன்றத்திலே திருமணம் செய்த எங்கள் சுப்ரமண்யா...முருகா சுப்ரமண்யா...
தேவதை தெய்வானையை கரம்பிடித்த எங்கள் சுப்ரமண்யா...முருகா சுப்ரமண்யா...
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
சூரனையே சூறையாடிய சூரபத்ரா, எங்கள் சண்டிகேஸ்வரா...முருகா சண்டிகேஸ்வரா...
திருசெந்தூரில் சூரனையே சூறையாடிய சூரபத்ரா, எங்கள் சண்டிகேஸ்வரா...முருகா சண்டிகேஸ்வரா...
பழமே எனக்கு, ஞான பழமே எனக்கு என தவமிருந்த, எங்கள் பாலகா...
பழநிமலையிலே பழமே எனக்கு, ஞான பழமே எனக்கு என தவமிருந்த, எங்கள் பாலகா...தங்க பாலகா...
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
சிவனுக்கே, பரமசிவனுக்கே...ஓம் என்ற மந்திரத்தை கற்றுகொடுத்த சுவாமிநாதா, எங்கள் ஞானபண்டிதா...
சுவாமிமலையிலே, சிவனுக்கே, பரமசிவனுக்கே...ஓம் என்ற மந்திரத்தை கற்றுகொடுத்த சுவாமிநாதா, எங்கள் ஞானபண்டிதா...
கோவாசம் தனியே, சூரனைக்கொன்ற உன் கோவாசம் தனியே, திருத்தணிகை மலையிலே குடிகொண்ட சண்முகா...முருகா சண்முகா
பழமுதிர்சோலையிலே வள்ளியை கரம்பிடித்த வடிவேலா...தெய்வதிருச்செல்வி வள்ளியை கரம்பிடித்த வடிவேலா...தங்க வடிவேலா
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவா...எங்கள் ஆண்டவா...அழகு ஆண்டவா...
ஆறுமுகம் கொண்ட ஷண்முகா...முத்து ஷண்முகா...முருகா ஷண்முகா....
Tuesday, June 17, 2025
About Baba Song
சாய்ராம்....
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
இருளில் ஒளியாய் வந்தாயே நீ பாபா...
ஆதரவற்றோர்க்கு தந்தையாய் இருப்பாயே நீ பாபா....
உனை நினைக்கும்போது காற்றில் கவலை கரைகின்றதே பாபா...
உனைக் காணும்போது கண்ணில் நீர் வழிகின்றதே பாபா...
உன் அருளால் வாழ்க்கை இங்கே வரமானதே பாபா...
எதிர்காலமும் இங்கே வசந்தமானதே பாபா...
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
உன் பிறப்பும் அறியோம், உன் பெரும் அறியோம்...
பாபா...
உன் பிறப்பும் அறியோம், உன் பெரும் அறியோம்...
நீ பிறந்த ஊரும் அறியோம்...பாபா...
பூமியின் சொர்க்கம் அது ஷீரடி தானே, பாபா...
உலகின் அருபெருமருந்து அது உன் உதிதானே...பாபா...
காலத்தையும் மாற்றிடுவாய் பாபா...
இங்கு காலனையும் விரட்டிடுவாய் பாபா...
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
- கார்த்திகேயன் பிச்சை
Saturday, May 17, 2025
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே...
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே...
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே...காக்கடா ஆராத்தியில் மனம் இங்கே கறையுதே...
பாபா மனம் இங்கே கறையுதே...
மத்யான ஆராத்தியில் மனம் இங்கே மயங்குதே...
பாபா மனம் இங்கே மயங்குதே...
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
தூப் ஆராத்தியில் மனம் இங்கே துள்ளிக்குதிக்குதே...
பாபா மனம் இங்கே துள்ளிக்குதிக்குதே...
சேஐ ஆராத்தியில் மனம் இங்கே சாந்தம் அடையுதே...
பாபா மனம் இங்கே சாந்தம் அடையுதே...
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
என் தோட்டத்து பூக்களும் உனைக்காண மனம் இங்கே துடிக்குதே...
பாபா மனம் இங்கே துடிக்குதே...
எனது வாகனமும் இங்கே வானில் பறக்குதே
பாபா இங்கே வானில் பறக்குதே...
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
கோயிலில் உன் அலங்காரம் இங்கே கண்ணை மயக்குதே
பாபா இங்கே கண்ணை மயக்குதே
இறைவா உன் திருவடி தொழும்போது, சமர்ப்பணம் சமர்ப்பணம் என மனம் இங்கே பாடுதே
பாபா மனம் இங்கே சமர்ப்பணம் சமர்ப்பணம் என பாடுதே
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
தித்திக்குதே, பாபா மனம் இங்கே தித்திக்குதே
Baba wake up song
ஆஹா ஆஹா ஆஹா
பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...
பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...
என் சக்கரக்கட்டியே எழுந்திடு பாபா...
என் பட்டுக்குட்டியே எழுந்திடு பாபா...
என் தங்க மகனே எழுந்திடு பாபா...
கதிரவனே வந்துவிட்டான் எழுந்திடு பாபா...
பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...
பட்டாடை உடுத்தலாம் எழுந்திடு பாபா...
பாலமுது பருகலாம் எழுந்திடு பாபா...
பல்லாக்கில் செல்லலாம் எழுந்திடு பாபா...
பாத்து பலூன் வாங்கலாம் எழுந்திடு பாபா...
பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...
அம்மாவை வம்பிழுக்கலாம் எழுந்திடு பாபா...
அப்பாவுக்கு ஆசைமுத்தம் குடுத்திட எழுந்திடு பாபா...
வானவில்லை பார்க்கலாம் எழுந்திடு பாபா...
மழைச்சாரலிலே குளித்திட எழுந்திடு பாபா...
பஞ்சு பனியில் குதித்து விளையாட எழுந்திடு பாபா...
பம்பரம் விளையாடலாம் எழுந்திடு பாபா...
பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...
விளையாட மொபைல் கேட்டால் தரமாட்டேன் பாபா...
டிவி அதிகம் பார்க்க விடமாட்டேன் பாபா...
அதிக வெண்ணைய் கேட்டால் தரமாட்டேன் பாபா...
தண்ணீரில் அதிகம் விளையாட விடமாட்டேன் பாபா...
பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...
Baba life song
ஓம் சாய்ராம்,
தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா
தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா
தானம் என்றேன் விளம்பரம் வேண்டாம் என்றாய் பாபா
சோம்பேறித்தனம் என்றேன் எறும்பை காண்பித்தாய் பாபா
கோபம் என்றேன் குழந்தை சிரிப்பால் அணைத்தாய் பாபா
துரோகம் என்றேன் கடந்து செல் என்றாய் பாபா
ஏமாற்றம் என்றேன் எது கிடைக்குமோ அது கிடைக்கும் என்றாய் பாபா...
பக்தி என்றேன் பனிமழையாய் வந்தாய் பாபா
தீபம் என்றேன் திரியாய் வந்தாய் பாபா
மாலை என்றேன் பூ மலராய் வந்தாய் பாபா
தீர்த்தம் என்றேன் மழைச்சாரலாய் வந்தாய் பாபா
இறைவா என்றேன் ஒரு புன்னகை பூத்தாய் பாபா
பொன்பொருள் என்றேன் அது மாயை என்றாய் பாபா
வசதிவாய்ப்பு என்றேன் மன நிம்மதியே பெரிய வசதி என்றாய் பாபா...
வேலைவாய்ப்பு என்றேன் விடாமுயற்சி என்றாய் பாபா...
வாழ்க்கை என்றேன் வாழ்ந்து காட்டு என்றாய் பாபா
ஆனந்தம் என்றேன் பேரானந்தமே பரமானந்தம் என்றாய் பாபா....
தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா
- கார்த்திகேயன் பிச்சை
Saibaba nirwana satakam
ஸ்ரீ சாய் நிர்வாண் ஷடகம்
பொங்கும் பொறாமை இல்லை
ஆர்ப்பரிக்கும் ஆசையும் இல்லை
கொந்தளிக்கும் கோபம் இல்லை
யார்மீதும் வெறுப்பும் இல்லை...
ஆட்டிப்படைக்கும் அஹங்காரம் இல்லை
எட்டி உதைக்கும் தலைக்கணமும் இல்லை
செல்வத்தின் மீது துளியும் எண்ணமில்லை
பணத்தின் மீது எந்த மோகமும் இல்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
எதிர்காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை
கடந்த காலத்தில் எந்த இழப்பும் இல்லை.
எதிரியாய் யாருமில்லை
அரவணைக்க கரங்கள் இல்லை...
பத்தவைக்கும் பகைமை இல்லை
வத்திவைக்கும் வஞ்சமில்லை
துன்பம் தரும் துரோகமில்லை
யாருக்கும் இங்கே பயமுமில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
பக்தி இல்லா வாழ்க்கை இல்லை
சக்தி இல்லாமல் சிவனும் இல்லை
வசதி வாய்ப்பு தேவையில்லை
ஸ்ரீ சாய் நாமமின்றி வேறேதும் தோன்றவில்லை...
திரு சாயின் அருளின்றி வேறேதும் அருமருந்து இங்கில்லை...
வாழ்க்கையில் வெற்றி தோல்வி ஏதுமில்லை
இருளில் நிழலின் உதவி தேவையில்லை
தன்னம்பிக்கை இல்லா வாழ்க்கை வாழ்ந்து பயனில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
உதிரும் உறவுகள் மீது பற்றில்லை.
எதிர்பார்க்கும் நண்பர்கள் மீது நாட்டமில்லை
எல்லையில்லா வாழ்க்கை இல்லை
வரன்கள் எளிதில் கிடைப்பதில்லை...
தண்ணீரின்றி உலகமில்லை
காற்றின்றி மனிதனில்லை
சூரியனுக்கு வெளிச்சம் தேவையில்லை
மீன்கள் தாகம் அறிவதில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
வளைவு நெளிவில்லா பாதையில்லை
எமனை ஏமாற்றிய மனிதனில்லை
இயற்கை சுயநலம் கொள்வதில்லை
இருளின்றி வெளிச்சத்திற்கு மதிப்பில்லை...
வேறின்றி மரங்கள் இல்லை
தாயின்றி பிள்ளை இல்லை
கடவுளன்றி பக்தனில்லை
பக்தனை என்றும் கடவுள் கைவிட்டதில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
எதுவும் இங்கே நிரந்தரமில்லை
அதை உணர்ந்தால் மனதில் பாரமில்லை
வாசத்திற்கு எங்கும் உருவமில்லை
பக்தியை அளக்கும் கருவி இங்கில்லை
ஸ்ரீ சாய் அறியாதது ஏதுமில்லை
அவர் பாதமின்றி சொர்க்கம் வேறேதுமில்லை
அவர் சன்னதியில் கிடைக்காத மனநிம்மதி இங்கில்லை
அவர் அருளால் தீராத மன குறையுமில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
- கார்த்திகேயன் பிச்சை
Subscribe to:
Posts (Atom)