Saturday, May 17, 2025

Baba wake up song

 ஆஹா ஆஹா ஆஹா 


பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...

பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...

என் சக்கரக்கட்டியே எழுந்திடு பாபா...
என் பட்டுக்குட்டியே எழுந்திடு பாபா...

என் தங்க மகனே எழுந்திடு பாபா...
கதிரவனே வந்துவிட்டான் எழுந்திடு பாபா...

பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...

பட்டாடை உடுத்தலாம் எழுந்திடு பாபா...
பாலமுது பருகலாம் எழுந்திடு பாபா...

பல்லாக்கில் செல்லலாம் எழுந்திடு பாபா...
பாத்து பலூன் வாங்கலாம் எழுந்திடு பாபா...

பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...

அம்மாவை வம்பிழுக்கலாம் எழுந்திடு பாபா...
அப்பாவுக்கு ஆசைமுத்தம் குடுத்திட எழுந்திடு பாபா...

வானவில்லை பார்க்கலாம் எழுந்திடு பாபா...
மழைச்சாரலிலே குளித்திட எழுந்திடு பாபா...

பஞ்சு பனியில் குதித்து விளையாட எழுந்திடு பாபா...
பம்பரம் விளையாடலாம் எழுந்திடு பாபா...

பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...

விளையாட மொபைல் கேட்டால் தரமாட்டேன் பாபா...
டிவி அதிகம் பார்க்க விடமாட்டேன் பாபா...

அதிக வெண்ணைய் கேட்டால் தரமாட்டேன் பாபா...
தண்ணீரில் அதிகம் விளையாட விடமாட்டேன் பாபா...

பாபா பாப்பா பாபா...
என் செல்ல பாப்பா பாபா...

No comments:

Post a Comment