Saturday, May 17, 2025

Baba life song

 ஓம் சாய்ராம், 

தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா 
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா 
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா 
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா 
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா 
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா 

தானம் என்றேன் விளம்பரம் வேண்டாம் என்றாய் பாபா 
சோம்பேறித்தனம் என்றேன் எறும்பை காண்பித்தாய் பாபா 
கோபம் என்றேன் குழந்தை சிரிப்பால் அணைத்தாய் பாபா 
துரோகம் என்றேன் கடந்து செல் என்றாய் பாபா
ஏமாற்றம் என்றேன் எது கிடைக்குமோ அது கிடைக்கும் என்றாய் பாபா...

பக்தி என்றேன் பனிமழையாய் வந்தாய் பாபா 
தீபம் என்றேன் திரியாய் வந்தாய் பாபா 
மாலை என்றேன் பூ மலராய் வந்தாய் பாபா 
தீர்த்தம் என்றேன் மழைச்சாரலாய் வந்தாய் பாபா 
இறைவா என்றேன் ஒரு புன்னகை பூத்தாய் பாபா

பொன்பொருள் என்றேன் அது மாயை என்றாய் பாபா 
வசதிவாய்ப்பு என்றேன் மன நிம்மதியே பெரிய வசதி என்றாய் பாபா...
வேலைவாய்ப்பு என்றேன் விடாமுயற்சி என்றாய் பாபா...
வாழ்க்கை என்றேன் வாழ்ந்து காட்டு என்றாய் பாபா 
ஆனந்தம் என்றேன் பேரானந்தமே பரமானந்தம் என்றாய் பாபா....

தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா 
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா 
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா 
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா 
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா 
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா 

- கார்த்திகேயன் பிச்சை 

No comments:

Post a Comment