Tuesday, June 24, 2025
Lord Muruga Song
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவா...எங்கள் ஆண்டவா...அழகு ஆண்டவா...
ஆறுமுகம் கொண்ட ஷண்முகா...முத்து ஷண்முகா...முருகா ஷண்முகா....
திரு கார்த்திகை பெண்களால் வளர்க்கபெற்ற கார்த்திகேயா ...எங்கள் கார்த்திகேயா...முருகா கார்த்திகேயா...
அமிர்தத்தின் சொந்தகாரன் நீதானே...பஞ்சாமிர்தத்தின் சொந்தகாரன் நீதானே...முருகா நீதானே
திருப்பரங்குன்றத்திலே திருமணம் செய்த எங்கள் சுப்ரமண்யா...முருகா சுப்ரமண்யா...
தேவதை தெய்வானையை கரம்பிடித்த எங்கள் சுப்ரமண்யா...முருகா சுப்ரமண்யா...
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
சூரனையே சூறையாடிய சூரபத்ரா, எங்கள் சண்டிகேஸ்வரா...முருகா சண்டிகேஸ்வரா...
திருசெந்தூரில் சூரனையே சூறையாடிய சூரபத்ரா, எங்கள் சண்டிகேஸ்வரா...முருகா சண்டிகேஸ்வரா...
பழமே எனக்கு, ஞான பழமே எனக்கு என தவமிருந்த, எங்கள் பாலகா...
பழநிமலையிலே பழமே எனக்கு, ஞான பழமே எனக்கு என தவமிருந்த, எங்கள் பாலகா...தங்க பாலகா...
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
சிவனுக்கே, பரமசிவனுக்கே...ஓம் என்ற மந்திரத்தை கற்றுகொடுத்த சுவாமிநாதா, எங்கள் ஞானபண்டிதா...
சுவாமிமலையிலே, சிவனுக்கே, பரமசிவனுக்கே...ஓம் என்ற மந்திரத்தை கற்றுகொடுத்த சுவாமிநாதா, எங்கள் ஞானபண்டிதா...
கோவாசம் தனியே, சூரனைக்கொன்ற உன் கோவாசம் தனியே, திருத்தணிகை மலையிலே குடிகொண்ட சண்முகா...முருகா சண்முகா
பழமுதிர்சோலையிலே வள்ளியை கரம்பிடித்த வடிவேலா...தெய்வதிருச்செல்வி வள்ளியை கரம்பிடித்த வடிவேலா...தங்க வடிவேலா
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவா...எங்கள் ஆண்டவா...அழகு ஆண்டவா...
ஆறுமுகம் கொண்ட ஷண்முகா...முத்து ஷண்முகா...முருகா ஷண்முகா....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment