அன்புள்ள மகனுக்கு,
அழகாய் ஒர் வீடு அமைத்தாய்
அதிலோ நீந்தி விளையாட நீச்சல் குளம் உண்டு
ஓடி விளையாட பூங்கா போன்ற தோட்டம் உண்டு
படுத்து உறங்க இரண்டு மூன்று அறைகள் உண்டு
உன் செல்ல நாய் உறங்க பஞ்சு மெத்தை உண்டு
காற்றாட பால்கனி உண்டு
ஆனால் ஏனோ எனக்கோர் இடம் இல்லை
இந்த முதியோர் இல்லத்தில் அன்போடு அரவணைக்க பல பேர் இருக்க
ஏதோ இந்த பெத்த மனம் உன் முகத்தை தேடுதடா,
பேரனின் மழலை பேச்சை கேட்க என் காது ஏங்குதடா,
ஒரு நிமிடம், கை பிடித்து உன் மடியில் தலை சாய்க்க நாடி துடிக்குதடா
சில சமயம் நா ஒரு அனாதை போன்ற எண்ணம் தொன்றுதடா
உறுக்கதுடுன் கேட்கிறேன், ஒரு நாள் உன் வீட்டில் நான் தங்க வாடகை என்ன தரவேண்டும்,
அதன் விலை என் உயிர் என்றாலும் தருவேன்,
என்னிடம் உள்ள எல்லாவற்றையும் உனக்காக கொடுத்த எனக்கு ,
எனக்காக மூன்று வரம் தருவாயோ,
முதல் வரமாய்,
இது வரை உன் வீட்டு வெந்த அரிசியை நான் ருசித்ததில்லை,
எனக்கான வாக்கரிசியை உன் வீட்டினிலிருந்து எடுத்தருள்வாயோ.
அடுத்த வரமாய்,
அடுத்த ஜென்மத்தில் உன் மகனாக பிறக்க வேண்டும்,
நீ தள்ளாடும் வயதில், உன்னை என் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்,
என் உயிரே போனாலும், உன்னை முதியோர் இல்லம் அனுப்பேன்
ஏனெனில், உன் அன்பில்லாமல் அனுபவித்த எனக்குதான் தெரியும்
பூமியின் நரகம் முதியோர் இல்லம் என்று.
கடைசி வரமாய்,
உன்னை கைபேசியில் அழைத்த போதெல்லம்,வேலையாக இருக்கிறேன்
என்று இரண்டு வார்த்தையில் விடை அளிப்பாய்,
நான் வசிக்கும் முதியோர் இல்லத்திலிருந்து எனக்காக உன்னை அழைத்தால் எடுக்காமல் இருக்காதே
எனக்கு கொள்ளி வைக்க மறக்காதே
என்றும் உன் அன்புக்காக எங்கும் உன் அப்பா.....
-கார்த்திகேயன் பிச்சை

Kalakkite nanba
ReplyDeleteThanks nanba
DeleteUrukkamana Kavithai
ReplyDelete